என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » வேலூர் கலெக்டர் ஆபிஸ்
நீங்கள் தேடியது "வேலூர் கலெக்டர் ஆபிஸ்"
வேலூர் கலெக்டர் ஆபீசில் அய்யாக்கண்ணுவை தாக்க முயன்ற இந்து அமைப்பினர் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேலூர்:
தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு விழிப்புணர்வு பயணத்தின் நீட்சியாக நேற்று வேலூருக்கு வந்திருந்தார். பாலாற்றில் தடுப்பணைகளை கட்ட வலியுறுத்தி மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்திற்கு சென்ற அவரை, சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் என்ற இந்து அமைப்பினர் தாக்க முயன்றனர்.
சக்தி சேனா இந்து மக்கள் இயக்கத்தினர், தேனி மாவட்டம் பொம்மிநாயக்கன் பட்டியில் மதமாற்றம் செய்ய தாக்குதல் நடத்துபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மனு அளிக்க வந்திருந்தனர். அப்போது தான், அய்யாக்கண்ணுவை ஒருமையில் பேசி தாக்க முற்பட்டனர். மேலும் கோஷம் எழுப்பினர்.
கலெக்டர் அலுவலகத்தில் அனுமதியில்லாமல் கோஷம் எழுப்பிய புகாரில் சத்துவாச்சாரி போலீசார், சக்தி சேனா இந்து மக்கள் இயக்க பொதுச்செயலாளர் ராஜகோபால் (வயது 48) உள்பட 4 நிர்வாகிகளை கைது செய்தனர்.
ஆனால் அய்யாக்கண்ணுவை தாக்க முயன்றது தொடர்பாக, சக்தி சேனா அமைப்பினர் மீது இதுவரை எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை. கைது செய்யப்பட்ட 4 பேரும் உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். #Tamilnews

×

X